எங்களைப் பற்றி
மரபு • கல்வி • குழந்தைகளின் எதிர்காலம்விளையாட்டு என்பது மனிதன் தன் தலைமுறையை பண்படுத்தவும் வரும் தலைமுறைக்கு கல்வி என்ற பேராற்றலை பயிற்றுவிக்கும் அடிப்படையிலும் தன்னிடம் உள்ள திறமையை ஆராயவும் உறுதிப்படுத்தவும் உருவாக்கிய செயலாகும். கல்விச் சார்ந்த பலகட்ட எங்களது ஆய்வு முடிவுகளில் விளையாட்டின் மூலமாகவே ஆரம்ப கல்வியை குழந்தைகளுக்கு எடுத்து செல்லமுடியும் என்பதை உறுதி செய்தோம்.
அதுமட்டுமல்லாது ஒரு குழந்தையின் செயல்திறன் உளத்தியலில் உறுதியானதா அல்லது உடலியலில் உறுதியானதா என்பதை அறிவதற்கும் அவர்களின் செயல்திறனை இயல்போடு மேம்படுத்துவதற்கும் ஒவ்வொரு விளையாட்டும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆகையால் விளையாட்டிற்கு அதற்கான பொருட்கள் முக்கியமானது, அதற்கேற்றவாறு தேர்ந்தெடுத்த விளையாடுப்பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், நமது மரபு கலைநயப் பொருட்களை மீளுருவாக்கம் செய்து சந்தைப்படுத்துவதிலும் செயல்பட்டுக்கொண்டிருகின்றோம்.
மரபு விளையாட்டுப்பொருட்களை ஆய்வு மற்றும் மேம்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.உங்கள் நலத்திலும் குழந்தைகள் நலத்திலும் பாரிய அக்கறையோடு தங்களுக்கு சரியான பொருட்களைச் சந்தைப் படுத்துவதில் பெருமகிழ்வு அடைகிறோம்